பழங்குடி இருளர் இன சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் மீது கடுமையான தண்டனை பெற்றுத் தருக: என்.கே.ஏகாநந்தன்

பழங்குடி இருளர் இன சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் விரைவாக விசாரித்து குற்றவாளியான தலைமை ஆசிரியர் மீது கடுமையான தண்டனை பெற்றுத் தரவேண்டும் என்று என்.கே.ஏகாநந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்த்தேச பழங்குடி முன்னணி நிறுவனத் தலைவர் என்.கே.ஏகாநந்தன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டில் ஆஞ்சநேயர் தெருவில் தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வரும் பழங்குடி இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த சிறுமியை அந்த பள்ளி தலைமை ஆசிரியரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து காவல் துறை முறையாக விசாரித்து தலைமை ஆசிரியர் மீது தக்க நடவடிக்கை வேண்டும்.