சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் அமைந்துள்ள அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயிலில் 31.12.2024 நாளன்று மதுரை ருத்ரா நாட்டியக் கலைக்கூடத்தின் குரு திருமதி V. A. காஞ்சனா தேவி, அவர்களின் வழிநடத்தலின் கீழ் பரதநாட்டிய உலக சாதனை நிகழ்ச்சி “நாட்டிய சங்கமம் 2025″ என்ற தலைப்பில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 250- க்கும் மேற்பட்ட 3 முதல் 16 வயது வரை உள்ள பெண் குழந்தைகள் அனைவரும் தாம்பளத் தட்டில் தொடர்ந்து 15 நிமிடங்கள் நடனமாடி புதிய நோபல் உலக சாதனை படைத்தனர். இந்நிகழ்வினை நோபல் உலக சாதனை புத்தகத்தின் இயக்குநர் முனைவர். R.ஹேமலதா நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்ததை உறுதிப்படுத்தினார். மேலும் இச்சதனையை நோபல் உலக சாதனை தீர்ப்பாளர்கள் ராதிகா மற்றும் தில்லை ஆகியோர் அங்கீகரித்தனர். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் திருமதி. காஞ்சனா தேவி மற்றும் பங்கேற்ற மாணவியர்கள் அனைவருக்கும் உலக சாதனை சான்றிதழ்கள் & பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வேதாத்திரி மகரிஷி பள்ளி நிர்வாகத்தினர் கலந்துகொண்டு விழாவை கௌரவித்தனர். இந்நிகழ்வில் கோயில் நிர்வாகம், பெற்றோர்கள், காவல்துறை, ஊடகத்துறை மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு குழந்தைகளை வாழ்த்தி பாராட்டினர்.
நாட்டிய சங்கமம் 2025
Related Posts
10மணிநேரம் சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.
கிருஷ்ணகிரி கிட்டாம்பட்டி பகுதியை சார்ந்த தம்பதி திரு.கிருஷ்ணன் ,திருமதி மாரி அவர்களின் புதல்வன் k.நித்திஷ் வயது 13 உலக இளைஞர்கள் தினத்தை கொண்டாடும் விதமாகவும் இன்றைய சூழ்நிலையில் மாணவ மாணவியர்களுக்கு மட்டும் அல்லாது பொதுமக்களுக்கும் மனமும் உடலும் ஆரோக்கியமாக திகழ உடற்பயிற்சியுடன்…
இன்னர் வீல் 323 அமைப்பின் 25 வது வெள்ளி விழா கொண்டாட்டம்
சென்னை இன்னர்வீல் மாவட்டம் 323 மகளிர் சங்கம் கொண்டாடும் மழலை ஒலி குழந்தைகளின் முகத்தில் சந்தோஷத்தைக் கொண்டுவர கொண்டாடும் நிகழ்ச்சி கடந்த 25 வருடங்களாக முன்னின்று இன்னர்வில் முன்னாள் சேர்மேன் நல்லம்மை ராமநாதன்அவர்களுடன் இணைந்து ஒவ்வொரு வருடமும் அந்த மாவட்ட சேர்மனும்,…