பெரியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சேலம் சௌடேஸ்வரி மகளிர் கலைக் கல்லூரி, நாட்டு நலப்பணி திட்ட முகாமில் இன்று(11.02.2025) தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய முன்னாள் உறுப்பினர் ஆர். சஞ்சய் காந்தி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பெண் தொழிலாளர்கள் நலன் குறித்த விழிப்புணர்வு வழங்கினார். கெஜ்ஜல்நாயக்கன்பட்டி சமுதாய கூடத்தில் நடந்த இந்த முகாமில் வழக்கறிஞர் சீனிவாசன், தாரை குழும நிர்வாக இயக்குனர் ராஜகணபதி, ஆகியோர் கலந்து கொண்டு பெண் தொழில் முனைவோர் குறித்த விழிப்புணர்வை சுமார் 150 மாணவியருக்கு ஏற்படுத்தினர்.இந்த NSS முகாமில், திட்ட அலுவலர்கள் சுகுணா, சம்பத்குமார், ஷேக் அப்துல்லா ஆகியோர் உடன் இருந்தனர்.