தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் 72 வது பிறந்த நாளையொட்டி தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பு சார்பில் சேலம் அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருகோயிலில் தங்கத்தேர் இழுக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவர் நாகா அரவிந்தன் தலைமையில்,சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகர் பாவா லட்சுமணன் கலந்து கொண்டார்.கூட்டமைப்பின் நிர்வாகிகள் மருத்துவர் ஓஷோ முரளி ஆர்.வி.பாபு ,ஆர்.சஞ்சய் காந்தி, கேசவன் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.