தேசிய முன்னேற்றக் கழகம் சார்பில் கண்டன அறிக்கை

தேசிய முன்னேற்றக் கழகம் நிறுவன தலைவர் ஜி ஜி சிவா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்

நேற்று 08 03 2025 அன்று திருத்தணி பகுதியைச் சார்ந்த மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த பத்திரிகையாளர்கள் விபத்து சம்பந்தமாக நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்றபோது சம்பந்தமே இல்லாமல் திருத்தணி காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஞானசேகரன் அவர்கள் கண்மூடித்தனமாக பத்திரிகையாளர்களை தாக்கியுள்ளார் மேலும் இந்த நிகழ்வு ஊடகம் மற்றும் பத்திரிகையில் பொதுமக்கள் பார்வைக்கு வந்திருக்கிறது ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தையும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்கும் பத்திரிகையாளர்களை தாக்கி இருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது தமிழக காவல்துறை என்று சொன்னாலே ஷ்காட்லாந்து காவல் துறைக்கு அடுத்தபடியாக இருப்பது நம் அனைவரும் அறிவோம் காவல்துறையின் மீது எங்களுக்கு அளவு கடந்த மதிப்பு இருக்கிறது காவல்துறையினர் மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் விமர்சனம் யாரேனும் வைத்தாலும் கூட முதல் குரலாக காவல்துறைக்கு ஆதரவாக ஒலிக்கக்கூடிய இடத்திலே பத்திரிகை மற்றும் ஊடகத்தின் வாயிலாக நாங்கள் இருக்கிறோம் காரணம் காவல்துறையினர் பொதுமக்களுக்கு இரவும் பகலும் பார்க்காமல் அயராது பாடுபடுவதின் நோக்கத்திற்காகத்தான் ஆனால் இப்பேற்பட்ட காவல்துறையினர் மத்தியில் ஞானசாகரன் போன்ற ஒரு சில நபரால் ஒட்டுமொத்த காவல்துறையினருக்கு அவ பெயர் ஏற்படுத்தக் கூடிய வகையில் அமைகிறது உடனுக்குடன் சம்பந்தப்பட்ட பத்திரிகையாளர்களை நேரில் சந்தித்து காவல் ஆய்வாளர் ஞானசேகரன் அவர்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டும் இதில் பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு மருத்துவ உதவி செய்திட வேண்டும் இனிவரும் காலங்களில் இது போன்று சம்பவம் நடக்காத வண்ணம் உறுதியளிக்க வேண்டும் இது நடக்காத பட்சத்தில் நிச்சயமாக தேசிய முன்னேற்றக் கழகத்தின் தலைமையின் சார்பாக மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம் மேலும் தமிழக காவல் டிஜிபி யை நேரில் சந்தித்து புகார் அளிக்கப்படும் என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம் என அறிக்கை குறிப்பிட்டு இருக்கிறார்