
சேலம் மேம்பால நகர் ஹவூசிங் ஃபோர்டு ஶ்ரீ ராஜ விநாயகர் கோவிலில் ஆடி மாதம் 3வது வெள்ளியை விமர்சையாக கொண்டாடும் விதத்தில் உலக மக்கள் நல்வாழ்வு பெற வேண்டி 3அடி உயரத்தில் பயன்படுத்தி 39நிமிடத்தில் கடவுள் முருகரை தண்டாயுதபாணி அவதாரத்தில் 4கிலோகிராம் சந்தனம் தூளை பயன்படுத்தி உருவம் அமைத்தும் அலங்கரித்தும் திரு.பிரதீப் உலக சாதனை படைத்தார். இந்நிகழ்வு நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்ததை புத்தகத்தின் இயக்குநர் முனைவர் ஹேமலதா அங்கீகரித்தார். மேலும் தீர்ப்பாளர்கள் செயலாளர் வெண்ணிலா, சுபாஷிணி,தேவிகா,பிரியா&நிவேதா உடன் இருந்தனர். மேலும் நிகழ்வின் சிறப்பு அழைப்பாளர்களாக திருமதி.சாரதா தேவி மாணிக்கம் ,துணைமேயர் சேலம் மாநகராட்சி,திருமதி.கோமதி, ஶ்ரீ ஹரி குரூப்ஸ் ,திருமதி பாலநரசு லோகன் தொழிலதிபர் பங்கேற்றனர். இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை ராஜ கணபதி நண்பர்கள் குழு & சில முருகன் அடிமை கோமதி தேவி பாசு சிறப்பாக செய்து இருந்தனர்.