சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் அமைந்துள்ள அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயிலில் 31.12.2024 நாளன்று மதுரை ருத்ரா நாட்டியக் கலைக்கூடத்தின் குரு திருமதி V. A. காஞ்சனா தேவி, அவர்களின் வழிநடத்தலின் கீழ் பரதநாட்டிய உலக சாதனை நிகழ்ச்சி “நாட்டிய சங்கமம் 2025″ என்ற தலைப்பில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 250- க்கும் மேற்பட்ட 3 முதல் 16 வயது வரை உள்ள பெண் குழந்தைகள் அனைவரும் தாம்பளத் தட்டில் தொடர்ந்து 15 நிமிடங்கள் நடனமாடி புதிய நோபல் உலக சாதனை படைத்தனர். இந்நிகழ்வினை நோபல் உலக சாதனை புத்தகத்தின் இயக்குநர் முனைவர். R.ஹேமலதா நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்ததை உறுதிப்படுத்தினார். மேலும் இச்சதனையை நோபல் உலக சாதனை தீர்ப்பாளர்கள் ராதிகா மற்றும் தில்லை ஆகியோர் அங்கீகரித்தனர். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் திருமதி. காஞ்சனா தேவி மற்றும் பங்கேற்ற மாணவியர்கள் அனைவருக்கும் உலக சாதனை சான்றிதழ்கள் & பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வேதாத்திரி மகரிஷி பள்ளி நிர்வாகத்தினர் கலந்துகொண்டு விழாவை கௌரவித்தனர். இந்நிகழ்வில் கோயில் நிர்வாகம், பெற்றோர்கள், காவல்துறை, ஊடகத்துறை மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு குழந்தைகளை வாழ்த்தி பாராட்டினர்.