சேலத்தில் பெண்களுக்கான மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் 500க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலை வாய்ப்பு!

சேலம் சுந்தர் லாட்ஜ் அருகில் அமைந்துள்ள ரோட்டரி கிளப் அரங்கத்தில் ரோட்டரி கிளப் ஆப் சேலம் மற்றும் எஸ் பி என் என் பிசினஸ் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் ,
வைய்ஸ் வேர்ல்ட் இன்ஃபோடெக் பிரைவேட் லிமிடெட், செல்ஃப் குரோ டெக்னாலஜிஸ் இணைந்து நடத்திய மகளிருக்கான மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றன. இதில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர் இதில் கல்வி தகுதி அனைத்து பட்டதாரிகளுக்கு மற்றும் வயது 19 முதல் 30 வயதுக்குள் உள்ளவர்களை தேர்வு செய்தனர். தேர்வு செய்யப்பட்டவர்கள் பெங்களூர் மற்றும் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பணி நியமனம் செய்ய பட உள்ளார்கள் என்று ரோட்டரி கிளப் ஆஃப் சேலம் பிரசிடெண்ட் செந்தில், ப்ராஜெக்ட் சேர்மன் பாலாஜி, எஸ் பி என் என் பிசினஸ் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் விஸ்வநாத்,வைய்ஸ் வேர்ல்ட் இன்ஃபோடெக் பிரைவேட் லிமிடெட் செல்ஃப் குரோ டெக்னாலஜி சிஇஓ பிரதாப் ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.