
நோபல் உலக சாதனை புத்தகத்தின் 7-ஆம் ஆண்டு சேவ ரத்னா விருது கோவை ராம்நகர் தனியார் விடுதியில் நடந்த விழாவில் உயிர் மெய் ஆயுத தற்காப்பு கலைச்சங்கத்திற்கு சிறந்த கலைபயிற்சியகம் என்று வழங்கப்பட்டது.
8 ஆண்டுகளாக தொடர்ந்து உயிர் மெய் ஆயுத தற்காப்பு கலைச்சங்கத்தில் சிலம்பம், கராத்தே போன்ற தற்காப்பு கலைகளையும் யோகமும் மாணவர்களுக்கு சிறப்பான முறையில் ஊக்கப்படுத்தி பயிற்சி தந்து அதன் தொன்மை மாறாமல் கற்பித்து வருகின்றனர். எங்களது கலைபயிற்சிகத்திற்க்கு நோபல் சேவரத்னா விருது 2025 ல் சிறந்த கலை பயிற்சியகம் என்ற விருதை அமைப்பின் பதிப்பாளர் திரு.தியாகு நாகராஜ்,இயக்குநர் .ஹேமலதா,தீர்ப்பாளர் தில்லை ஆகியோர் எங்களுக்கு விருதை வழங்கி கௌரவித்தனர்.அவர்களுக்கு உயிர் மெய் ஆயுத தற்கப்பு கலைச்சங்கத்தினர் தனது நன்றியை தெரிவித்தனர்.