
சேலம் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆட்டையாம்பட்டி காவல் நிலையம் முன்பு மாபெரும் பொதுக்கூட்டம்.
இந்தி திணிப்பு- நிதி பகிர்வில் பாரபட்சம்- தொகுதி சீரமைப்பில் அநீதி இழைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து
சேலம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் தலைமையில், சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் டாக்டர். வீரபாண்டி
ஆ.பிரபு முன்னிலையில் சேலம் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் வீரபாண்டி சட்டமன்ற தொகுதி, ஆட்டையாம்பட்டி பேரூரில் வெகு சிறப்பாக நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் , திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் மருத்துவர்.தருண், கிழக்கு மாவட்ட துணை செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார் கண்டன பொதுக்கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர்கள், முனைவர்.சபாபதி, மோகன்,ரமேஷ் ஆகியோர் கண்டன உரை உரையாற்றினர். நிகழ்வில் மாவட்ட கழக நிர்வாகிகள்,ஒன்றிய கழகச் செயலாளர்கள், உமாசங்கர், வெண்ணிலா சேகர்,
மாணிக்கம், பேரூர் கழக செயலாளர் முருகப்பிரகாஷ், இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் பி.வி.ரமேஷ்,
சதீஷ்குமார், மனோஜ்குமார், சிவராமன், பிரகாஷ்,
நடராஜன், ரூபன் கிளைக் கழக வார்டு கழக செயலாளர்கள், பாக முகவர்கள் (BLA2), இளைஞர் அணி, சார்பு அணிகளின் நிர்வகிகள் கழக மூத்த முன்னோடிகள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.