சேலம் எருமாபாளையம் செயின்ட் பீட்டர்ஸ் & நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி வளாகத்தில் மரகன்றுடன் உலக சாதனை.
சேலம் எருமாபாளையம் செயின்ட் பீட்டர்ஸ் நர்சரி & பிரைமரி பள்ளி மற்றும் ஆதவன் அகாடமி இணைந்து அன்னையர் தினத்தை கொண்டாடும் விதமாக தாய் & குழந்தையுடன் புஜங்காசனத்தில் தலையில் மரக்கன்று ஏந்தி 300 வினாடிகள் சிலை வடிவத்தில் இருந்து உலக சாதனை படைத்தனர். மாடித்தோட்டம் அமைத்தல்,பாக்கெட் சிறு தீனிகளை தவிர்த்தல்,பழங்கள் ,காய்கறிகள் என வீட்டில் சமைத்த உணவுகளை உட்கொள்ள வேண்டும் எனவும் உடல் ஆரோகியத்திற்க்கு யோகாசனம் மிக முக்கியம் என பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் 80க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் & அவர்கள் பெற்றோர்கள் என அனைவரும் உலக சாதனை நிகழ்வில் பங்கேற்றனர்.இச்சாதனையை நோபல் உலக சாதனை புத்தகத்தின் இயக்குநர் Dr.R.ஹேமலதா அங்கீகரித்து உறுதிபடுத்தினார்..தீர்ப்பாளர்கள் Dr.சிட்டுகலா, சுபாசினி ஆகியோர் சான்றிதழ் & பதக்கம் வழங்கினர். இந்நிகழ்வின் சிறப்பு அழைப்பாளர்களாக திருமதி.Dr.கோமதி பிரியா,திரு.ஶ்ரீராமன், சிலம்ப அமுதன் , மாஸ்டர் முருகேசன் பங்கேற்றனர்.
பங்கேற்பாளர் & பார்வையாளர்கள் என அனைவருக்கும் இலவசமாக பழ மரகன்றுகள் வழங்கப்பட்டது.இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை செயின்ட் பீட்டர்ஸ் நர்சரி & பிரைமரி பள்ளியின் தாளாளர் திரு.சத்ய அர்ஜூனன் & யோகா ஆசான் ஐயப்பன் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.