குழந்தைகள் தினத்தை கொண்டாடும் விதமாக கிரியேட்டர்ஸ் அகாடமி &JUST NOW INDIA இணைந்து மாணவ மாணவியர்களின் தனித்திறமையை வெளி கொணரும்‌ வகையில் ஒரு நிமிட தனி திறன் உலக சாதனை நிகழ்வை நடத்தினர்.தமிழகம் முழுவதும் இருந்து மாணவ மாணவியர்கள் இணையதளம் &நேரடி யாகவும் நடைபெற்ற நிகழ்வில் தனி திறமைகளை காண்பித்து உலக சாதனை படைத்தனர்.இந்த சாதனை நிகழ்வை நோபல் உலக சாதனை புத்தகம் குழுவினர் அங்கீகரித்தனர். முனைவர் .R.ஹேமலதா இயக்குநர் அங்கீகரித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மாண்பு மிகு. திருமதி.சங்கீதா நீதி வர்மன் 12 வந்து வார்டு மாமன்ற உறுப்பினர்,திருமதி .முனைவர் .கோமதி ஶ்ரீ ஹரி புரமோட்டர்ஸ் நிறுவனர்,திரு.K.S.ரவி SRV பப்ளிக் பள்ளி முதல்வர், திருமதி. விச்சு நிவிஷா ஸ்போர்டஸ் அகாடமி,கராத்தே நிறுவனர்& திரு.சங்கர் தி சென்னை சில்க்ஸ் மேலாளர்

ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழும் பதக்கமும் வழங்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நோபல் உலக சாதனை குழுவினர் செல்வி.ராதிகா,திருமதி.பிருந்தா ,திருமதி.பிரியா &செல்வன்.சஞ்ஜெய் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.