பத்து கிலோமீட்டர் இடைவிடாமல் சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை

சேலம்
செல்வி நித்யஸ்ரீ 13 வயது ஶ்ரீ சாரதா வித்யாலயா அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவி

தந்தை பாலாஜி தாய் சத்யா இருவரும் ஆட்டோ ஓட்டுநர்கள்

இவர்களின் மகளான நித்யஸ்ரீ
இன்று பெண்களின் பாதுகாப்புக்காக தற்காப்பு கலை முக்கியம் என பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 10 கிலோமீட்டர் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்துள்ளார்.

இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு தேவையான தற்காப்பு கலை
எந்த கலையானாலும் முக்கியம் என்பதை வலியுறுத்தி இந்த உலக சாதனை‌ நிகழ்வு நடைபெற்றது.
இந்த உலக சாதனை நிகழ்வானது நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்ததை புத்தகத்தின் இயக்குனர் முனைவர் ஆர். ஹேமலதா மற்றும் தீர்பாளர் ராதிகா அங்கீகரித்து சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கினர். இதில் சிறப்பு அழைப்பாளராக மாண்புமிகு துணை மேயர். திருமதி சாராத தேவி மாணிக்கம் அவர்கள் கலந்துகொண்டு மாணவியை பாராட்டி சான்றிதழ் வழங்கினார். அவர் கூறுகையில் மாணவிகளுக்கு தற்காப்பு கலைகள் மிக முக்கியம் என்பதையும் நடந்து வரும் காலகட்டங்களில் பல்வேறு விதமான இடையூறுகள் நடப்பதை மாணவிகள் எதிர்கொள்ள தயாராக இருக்கணும் அவர்களின் தாயாரும் அவர்களுக்கு உறுதுணை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மாணவி மற்றும் பெற்றோர்கள் உடனே கருத்துக்களை பரிமாறினார்… மேலும் சிலம்பம் ஆசான் முருகேசன் , மற்றும் தொழிலாளர்கள் நலவாரிய அமைப்பு முன்னாள் உறுப்பினர் சஞ்சய் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்…