சென்னை உலக யோகா தினத்தை கொண்டாடும் விதமாக மைக்கி எஜூகேசனல் இன்ஸ்டிடியூட்,ஜஸ்ட் நௌ இந்தியா மற்றும் இந்தியன் டிரேடிசனல் மார்சல் ஆர்ட்ஸ் இணைந்து சென்னையின் பல்வேறு பகுதிகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வயது வித்யாசம் இன்றி 6 ஆசனங்கள் 21 நிமிடங்கள் 25நொடிகள் இடைவிடாது நின்றபாதாசனா, கோமுகாசனா,
புஜங்காசனா, தனுராசனா, உக்கட்டாசனா, பர்ச்சிமோட்டாசனா என ஒவ்வொரு ஆசனுமும் 3நிமிடங்கள் எனவும் பத்மாசனத்தில் 3 நிமிடம் 25 நிமிடங்கள் என சிலை வடிவத்தில் ஆசனங்களை இணையதளம் மற்றும் நேரடியாகவும் செய்து நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.மேலும் பங்கேற்பாளர்களுக்கு மரகன்றுகள் வழங்கி நட்டும் வைத்து OUR HEALTH !OUR EARTH ! என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்வு உலக சாதனை படைத்ததை நோபல் உலக சாதனை புத்தக்த்தின் பதிப்பாளர் திரு. தியாகு நாகராஜ் ,இயக்குநர் திருமதி .ஹேமலதா அங்கீகரித்தனர். மேலும் தீர்ப்பாளர்கள் கலைவாணி,மணிகண்டன்,கமலகுமாரி ஆகியோர் நடுவர்களாக தீர்ப்பளித்தனர்.
இதில் சிறப்பு விருந்தினராக
மக்கள் சேவகர்
தலைவர் S ரவி அவர்கள்
சித்தாலப்பாக்கம் ஊராட்சி
கலந்துகொண்டு மாணவர்களை வாழ்த்தினார்
நிகழ்விற்கான ஏற்பாடுகளை இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ட்ரடிஷனல் மார்ஷியல் ஆர்ட்ஸ் மற்றும் எர்லி ஸ்டெப்ஸ் பள்ளி அமைப்பினர் செய்து இருந்தனர்.