
சென்னை
இன்னர்வீல் மாவட்டம் 323 மகளிர் சங்கம் கொண்டாடும் மழலை ஒலி குழந்தைகளின் முகத்தில் சந்தோஷத்தைக் கொண்டுவர கொண்டாடும் நிகழ்ச்சி கடந்த 25 வருடங்களாக முன்னின்று இன்னர்வில் முன்னாள் சேர்மேன் நல்லம்மை ராமநாதன்
அவர்களுடன் இணைந்து ஒவ்வொரு வருடமும் அந்த மாவட்ட சேர்மனும், பொருளாளர்களும் உடனிருந்து நடத்துவார்கள்.
இந்த வருடம் மாவட்ட சேர்மன் தேவி மதிமாறன்,மாவட்ட பொருளாளர் சுகன்யா ஸ்ரீ ராம் மற்றும் 73 இன்னர்வில் சங்கத்தின் தலைவிகள், பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சி ஆசிரம குழந்தைகள், அரசு பள்ளி குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான தீபாவளி கொண்டாட்டமாகும். இந்த நிகழ்வை
1999 – 2000 இல் இருந்து நடத்தி வருகின்றனர்.
இந்த வருடம் மழலை ஒலி வெற்றி நடை போட்டு வெள்ளி விழாவை சென்னை ஒத்திவாக்கம் ஹனுரெட்டி ராகவா மாந்தோப்பில் மாம்பழ சீசன் முடிவதற்குள் கொண்டாடப்பட்டது.ஒவ்வொரு குழந்தைக்கும் பள்ளி புத்தக பை , புதிய உடை சோப், தொப்பி பேஸ்ட் பிரஷ் ஹெல்த் ட்ரிங்க்ஸ், பிஸ்கட் சாக்லேட் வரை வதற்குத் தேவையான பென்சில்கள், கலர் பென்சில்கள் மற்றும் புத்தகங்கள், டவல், வழங்கப்பட்டது.
அனைத்து குழந்தைகளுக்கும் பலவகையான இனிப்புகள் மற்றும் சுவையான உணவுகள் வழங்கப்பட்டது. குழந்தைகளை மகிழ் விக்கவும் ஊக்குவிக்கவும் ஒரு சினிமா நட்சத்திரமும் அழைக்கப்படுகிறார். இந்த வருடம் காமெடியன் ரெடின் கிங்ஸ்லே மற்றும் தயாரிப்பாளர் சிவா அவர்களும் வருகை புரிந்துள்ளனர்.
இந்த வருடம் முக்கியமாக குழந்தைகளின் உடல் ஆரோக்கியத் திற்க்காக ஜூம்பா நடன நிகழ்ச்சி, தற்காப்புக்காக சிலம்பம் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் செடி வளர்ப்பிற்காக தோட்டக் கலைகள் மற்றும் ஒவியம் எல்லாம் கற்றுக் கொடுத்து. காலை சிற்றுண்டி மதிய உணவும் கொடுக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியைக் கண்டு களிக்க குழந்தைகளுடன் அவர்களின் ஆசிரியர்களும் உடன் வந்தனர்.
இது தொடர்ச்சியாக இருபத்தைந்து ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு சாதனை முறிவாக இருப்பதால் நோபல் உலக சாதனை புத்தகத்தின் இயக்குனர் முனைவர் ஹேமலதா இந்த மழலை ஒலி நிகழ்ச்சியை அங்கீகரித்து நோபல் உலக சாதனை சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தீர்ப்பார்கள் வெண்ணிலா, சதீஷ்குமார், கமலி, மணி, பவ்யா, கிரீஷ்மா ஆகியோர் உடனிருந்தனர்.