
கிருஷ்ணகிரி கிட்டாம்பட்டி பகுதியை சார்ந்த தம்பதி திரு.கிருஷ்ணன் ,திருமதி மாரி அவர்களின் புதல்வன் k.நித்திஷ் வயது 13 உலக இளைஞர்கள் தினத்தை கொண்டாடும் விதமாகவும் இன்றைய சூழ்நிலையில் மாணவ மாணவியர்களுக்கு மட்டும் அல்லாது பொதுமக்களுக்கும் மனமும் உடலும் ஆரோக்கியமாக திகழ உடற்பயிற்சியுடன் தற்காப்பு கலை முக்கியம் என்பதை விழிப்புணர்வு வாக வெளிப்படுத்தும் விதத்தில் இடைவிடாது 10 மணி நேரம் ஒற்றை கம்பில் சிலம்பம் சுழற்றி நோபல் உலக சாதனை புத்தக்த்தில் இடம் பிடித்தார்.இப்புத்தகத்தின் இயக்குநர் முனைவர் ஹேமலதா அங்கீகரித்து சான்றிதல் &பதக்கம் மாணவருக்கு வழங்கினார்.தீர்ப்பாளர்கள் வெண்ணிலா,பிரியா,தேவிக்கா &முத்தமிழ் உடன் இருந்தனர்.உமாராணி ஸ்பெஷாலட்டி மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் மருத்துவ உதவி செய்தனர்.இந்த உலக சாதனை நிகழ்விற்க்கு சிறப்பு அழைப்பாளர்களாக வழக்கிறிஞர்கள் திரு. பட்டாபிராமன் ,திரு.மாது ஆகியோர் மாணவரை வாழ்த்தினர்.மேலும் ஆசான் சிலம்பம் கீர்த்தி மாணவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.மாணவரின் பள்ளி தலைமை ஆசிரியர் திரு.செங்குட்டுவன் அனைத்து மாணவர்களுக்கும் முன்மாதிரியாக திகழ்கிறார் என்ற பாராட்டை தெரிவாத்தார்